தினம் தினம் நான்
உன்னை மறக்க நினைக்கிறேன்
உன் நினைவுகளை அழிக்கத்துடிக்கிறேன்
உன் குரல் கேட்கக்கூடாது என்பதற்க்காக செவிகளை செவிடாக்குகிறேன்
உன் பெயர் உச்சரிக்கக்கூடாது என்பதற்க்காக மெளனமாக இருக்கிறேன்இவை அனைத்தும்
நான் உன்னை வெறுப்பதனால் அல்ல….!!
நீ என்னை வெறுத்து விட்டாய் என்பதனால்….!!உன்னால் முடியும்பொது
நிச்சயமாய் என்னாலும் முடியும்…!!!