மனிதன்

Image

கல்லை எடுத்ததும் ஓடிப்போக‍‍ – நீ

ஒரு நாய் அல்ல‌

தொட்டவுடன் சுருங்கிப்போக – நீ

ஒரு தொட்டாச்சிணுங்கி அல்ல‌

நுகர்ந்தவுடன் வாடிப்போக  – நீ

ஒரு அனிச்சமலரும் அல்ல‌

வெளிச்சத்தைக் கண்டு ஓடி ஒழிய – நீ

ஒரு கரப்பான் பூச்சியும் அல்ல‌

துயர் பல வந்தாலும்

இடர் பல தந்தாலும்

எதிர்த்து நிற்பாய்

ஏனென்றால் – நீ

“மனிதன்”