மரணம்

மரித்தாலும் மாறாதது எனப்படும் நியதிகள்,
மரணத்தால் மாற்றப்படும்.

Advertisements

மலர்

பதமாய் விதை விதைத்து;

பண்பட்டிட நிதம் நீர் இரைத்து;

இரவு பகலென இமையாய் காத்து;

தளிராய் மலராய் ஒளிர்வதை ரசித்து;

கனிவாய் பறித்து,

அலரினை மாலையாய் தொடுத்து,

சூடும் வேலையிலே….
சுவடின்றி வாடிப் போகின்றாயே…..

தேடி தீர்த்தாலும் பிழையில்லை ,
உயிர் தேடியும் விடையில்லை ,
கரைந்ததோடிட வழியில்லை .

விதியின் சதியாகி ,

இறுதியில் மடிந்தது மலரல்ல,
உறுதியுள்ள எந்தன் மனம்.

கனவுகள்

ஊட்டம் கொடுக்கப்படாத கனவுகள்
வலுவிழந்து,
மடிந்து,
மக்கி,
சுவடின்றி நம் வாழ்க்கையிலிருந்து மறைந்து போகின்றன…

மரணம்

மிக வேகமாய் எதிர் திசையில் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில்,
தொடர்ந்து சென்றாலும் மரணம். தப்பிச்செல்ல குதித்தாலும் மரணம்.

தோல்வி

உன் இதழ்களில் பிறந்து,
காற்றினில் மிதந்து,
செவிகளின் வழியே நுழைந்திட்டு
என் உயிரினில் கலந்திட்ட‌
உன் வார்த்தைகளை ‍‍‍ தொலைக்கும் முயற்சியில்
தினம் தினம் தோற்கின்றேன்

நினைவுகள்

கடந்து செல்லும் சாலை எங்கும்
பரந்து கிடக்கும் நினைவுகள்
அகம் மகிழ்ந்து வாழ்ந்த இடங்களை
என்றுமே மனம் கனத்து தான் கடக்கிறோம்

வெறுமை

நிறைகள் நிறைந்திருந்தாலும்
குறையாய் இருக்கிறது நீ இல்லா வெறுமை