கவிதை

கனவுகளும் என்னுடையவை,
நினைவுகளும் என்னுடையவை,

வலிகளும் யாவும் என்னுடையவை ,
எழுதும் வார்த்தைகள் யாவும் என்னுடையவை ,

ஆனால் நிறைந்திருப்பதெல்லாம் நீ மட்டுமே …

Anklet

37a07609cd6c1e5473596bef46eb4e72--anklets-barefoot

Why we should wear anklets?

Wearing anklets with big beads, whenever we are walking around we will enjoy the sound it makes.The scientific reason behind is it”s health benefits.Anklets vibrates the energy back to the body.It cure swelling of ankle, back pain and it regulates circulation of blood which reduces swelling problems.

Why we should not wear gold anklets?

Its believed that , one should never wear gold anklets.Gold is equivalent to god Lakshmi.She is goddess of wealth. if we are wearing gold in our feet its like disrespecting god and we will face the consequences in our life.

The exact scientific reason behind it is , gold is a metal which generates heat and silver is a metal that is generates cooling effect.Our lower body should be cool to liberate the heat from our body.So wearing gold anklet is not in tradition and we are following to wear silver anklets always.We wear gold ornaments in upper body , so that the flow of energy from lower to upper body keeps it in a good health

மலர்

பதமாய் விதை விதைத்து;

பண்பட்டிட நிதம் நீர் இரைத்து;

இரவு பகலென இமையாய் காத்து;

தளிராய் மலராய் ஒளிர்வதை ரசித்து;

கனிவாய் பறித்து,

அலரினை மாலையாய் தொடுத்து,

சூடும் வேலையிலே….
சுவடின்றி வாடிப் போகின்றாயே…..

தேடி தீர்த்தாலும் பிழையில்லை ,
உயிர் தேடியும் விடையில்லை ,
கரைந்ததோடிட வழியில்லை .

விதியின் சதியாகி ,

இறுதியில் மடிந்தது மலரல்ல,
உறுதியுள்ள எந்தன் மனம்.

மரணம்

மிக வேகமாய் எதிர் திசையில் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில்,
தொடர்ந்து சென்றாலும் மரணம். தப்பிச்செல்ல குதித்தாலும் மரணம்.

தோல்வி

உன் இதழ்களில் பிறந்து,
காற்றினில் மிதந்து,
செவிகளின் வழியே நுழைந்திட்டு
என் உயிரினில் கலந்திட்ட‌
உன் வார்த்தைகளை ‍‍‍ தொலைக்கும் முயற்சியில்
தினம் தினம் தோற்கின்றேன்

வெறுமை

நிறைகள் நிறைந்திருந்தாலும்
குறையாய் இருக்கிறது நீ இல்லா வெறுமை

தோள்

stock-photo-a-couple-in-love-on-the-background-of-water-girl-lies-on-the-shoulder-of-a-guy-780411073

சாய்ந்து கொள்ள திண்ண‌மான தோள்கள் இருக்கையில்
தோள் சாயும் துன்பங்கள் நெடுந்தூரம் தொடர்வதில்லை